உங்கள் Google கணக்கில் உள்நுழைவதற்கு எளிதான மற்றும் மிகவும் பாதுகாப்பான வழி
கடவுச்சாவிகள் என்பவை கடவுச்சொற்களுக்கான எளிமையான, அதிகப் பாதுகாப்பான மாற்றாகும். அவற்றைப் பயன்படுத்தி உங்கள் கைரேகை, முக ஸ்கேன், திரைப் பூட்டு போன்றவற்றின் மூலம் உள்நுழையலாம்.
-
எளிமையானது
உங்கள் Google கணக்கில் சிரமமின்றி எளிதாக உள்நுழையும் அனுபவத்தைக் கடவுச்சாவிகள் வழங்குகின்றன. இதற்காக அவை கைரேகை, முகம், பின் (PIN), பேட்டர்ன் போன்ற சாதனப் பூட்டுகளைப் பயன்படுத்துகின்றன.
-
பாதுகாப்பானது
கடவுச்சாவிகள் மிக வலிமையான பாதுகாப்பை வழங்குகின்றன. அவற்றை யூகிக்கவோ ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தவோ முடியாது என்பதால் தீங்கிழைப்பவர்களிடமிருந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
-
தனிப்பட்டது
கைரேகை, முக ஸ்கேன் போன்ற உங்கள் பயோமெட்ரிக் டேட்டா உங்களின் தனிப்பட்ட சாதனத்தில் சேமிக்கப்படுவதுடன், ஒருபோதும் Google உடன் பகிரப்படாது.
1-2-3 எண்ணுவதைப் போல் சுலபமானது
உங்கள் Google கணக்கில் உள்நுழையுங்கள், சாதனத்தில் கடவுச்சாவியை அமையுங்கள், எல்லாம் தயார்!